1. Home
  2. தமிழ்நாடு

விஜய் நடித்த படமே இரண்டு நாட்கள் ஓடவில்லை... இதுல தவெக - அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்..!

1

சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “சினிமா பார்க்க வரும் கூட்டத்தைப் பார்த்து அனைவரும் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று விஜய் கட்சி தொடங்கியுள்ளார். ஆறு மாதத்திற்கு தான் இந்த கட்சி ஓடும். அதன்பிறகு அந்த கட்சி தாக்குப் பிடிக்காது.

ஆறு மாதத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெட்டியை உள்ளே வைத்துவிடலாம். விஜய் நடித்த படமே இரண்டு நாட்கள் கூட ஓடவில்லை. தொடர்ந்து இயங்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். ஆகவே, யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோட் திரைப்படம் வெளியான சமயத்தில், “முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்பவர்களால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்?” என்று சூசகமாக விமர்சனம் செய்திருந்தார் தா.மோ.அன்பரசன்.

Trending News

Latest News

You May Like