1. Home
  2. தமிழ்நாடு

விஜயலட்சுமி வெளியிட்ட பரபர வீடியோ : என்ன பார்த்தா எப்படிடா தெரியுது? 2 நாளுக்கு முன்னாடி கூட...

1

நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் என்னை ஏமாற்றாதீங்க.. எனது பாவத்தை வாங்கி கொள்ளாதீர்கள், சீமான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் விஜயலட்சுமி.

அந்த வீடியோவில் பேசியுள்ள விஜயலட்சுமி, "முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். 2023ல் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பேசியபடி மாதம் ரூ.50,000 அனுப்பி வைத்தார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் சீமான் கூறுகிறார்.

உங்க பொன்னான வாயால தான் என்ன பொண்டாட்டி... பொண்டாட்டி என்று அழைச்சீங்க. அப்பறம் என்கிட்ட வீடியோவும் கேட்டீங்க.. இப்போ என்ன நான் திமுக தான் என்னை அழைச்சிட்டு வந்தீங்கனு சொல்றீங்க. திமுக ஒன்னும் என்னிடம் வந்து மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கல. இப்போ என்னனா, அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான்.

நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா தெரியுதுனு கேக்க நான் ரெடியா இருக்கேன். 2 நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிட்டு, அப்போ பிரஸ் மீட்ல என்னைய பத்தி பேசிருக்கீங்க. நான் அப்படி, இப்படினு பேசிருக்கீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னலாம் பண்ணப்போகுது பாருங்க. சீமான்  எனப் பேசியுள்ளார்.

Trending News

Latest News

You May Like