விஜயலட்சுமியின் கருப்பப்பை அகற்றும் அளவுக்கு பாதிப்பு! உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த வீரலட்சுமி..!

தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயலட்சுமி அக்கா என்னை தொடர்பு கொண்டு பேசினார். சீமான் விவகாரத்தில் நாம் இருவரும் ஒன்றாக இணைந்து எனக்கான நீதியை நீங்களே பெற்றுத்தர வேண்டும் எனக் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நான் எப்போதுமே உறுதுணையாக நிற்பேன்.
விஜயலட்சுமி பேசும்போது அதிர்ச்சியான செய்தி ஒன்றை சொன்னார். அதை கேட்டவுடன் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டது. சீமானால் ஏழு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதால் விஜயலட்சுமியின் கருப்பப்பையை மருத்துவர்கள் அகற்ற சொல்லியுள்ளதாக கூறினார். கருப்பப்பை அதிகமாக பாதிக்கப்பட்டதை கேட்டு எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டது.
நேற்று கனிமொழி எம்பி, சுதா எம்பியும் விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். பெண்மையை போற்றுபவர்கள் விஜயலட்சுமிக்கு ஆதரவாக உள்ளனர். விஜயலட்சுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். சீமானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெண்களை திரட்டி போராடுவோம். விஜயலட்சுமிக்கு நீதி விரைவாக கிடைக்க வேண்டுமென தமிழர் முன்னேற்றப் படை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.