விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட உள்ள சந்தன பேழையில் இடம்பெற்றுள்ள வாசகம்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதிச் சடங்கு கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், அவரது இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து தொடங்கியிருக்கிறது.இன்னும் சில மணி நேரத்தில் தேமுதிக அலுவலகத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி சடங்கு நடைபெறும் கோயம்பேட்டில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே, அவர் அடக்கம் செய்யப்பட உள்ள சந்தன பேழையில் 'புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் என்றும், அதனுடன், அவரது பிறந்த தேதி மற்றும் மறைந்த தேதியும் இடம்பெற்றுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு, முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#WATCH | ‘கேப்டன்’ விஜயகாந்த் துயில்கொள்ளும் சந்தன பேழை! #SunNews | #RIPCaptainVijayakanth | #CaptainVijayakanth | #Vijayakanth | #விஜயகாந்த் pic.twitter.com/7a6Pkprwl9
— Sun News (@sunnewstamil) December 29, 2023