விஜயகாந்தின் செயல் உன்னதமானது.. நடிகர் பவன் கல்யாண் புகழாரம்..!

விஜயகாந்தின் செயல் உன்னதமானது.. நடிகர் பவன் கல்யாண் புகழாரம்..!

விஜயகாந்தின் செயல் உன்னதமானது.. நடிகர் பவன் கல்யாண் புகழாரம்..!
X

கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் மருத்துவர் உயிரிழந்தார். அவரது உடலை புதைக்க சென்ற ஊழியர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கி மருத்துவர் உடலை அங்கு புதைக்கக் கூடாது என்று பிரச்சனை ஏற்படுத்தினர். அதற்குப் பின்னர் போலீசாரின் உதவியுடன் மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்திற்கு பதிலாக வேப்பனஞ்சாவடிக்கு கொண்டுச்சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பிரச்சனை பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் மற்றும் மருத்துவத் துறையில் உள்ளவர்களும் கண்டனம் தெரிவித்தும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் இந்தக் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தன்னுடைய கல்லூரியின் ஒரு பகுதியை தருவதாக அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் அவர் டுவிட்டர் பக்கத்தில், இறந்தவர்களின் அவர்களது உடலை புதைக்க மறுக்கப்பட்ட நிலையில், விஜயகாந்த் அவரது நிலத்தை கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கு செய்ய கொடுத்திருப்பது என்பது மிகவும் உன்னதமான செயல் என்று பாராட்டியிருக்கிறார்.

newstm.in

Next Story
Share it