1. Home
  2. தமிழ்நாடு

விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்... குருபூஜையில் குவிந்த தொண்டர்கள்!

விஜயகாந்த்

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று குருபூஜை விழாவாக அனுசரிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் வெண்கல சிம்மாசனத்தில் மார்பளவு சிலை நிறுவி மரியாதை செலுத்தப்பட்டது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

‘கேப்டன்’ என அழைக்கப்பட்ட விஜயகாந்த், 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். 2005-ல் தேமுதிக தொடங்கி, 2011-ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார். ஏழை, எளியோருக்கான உதவிகள், அன்னதானம் போன்ற சமூக பணிகள் அவரை மக்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தன. 2023 டிசம்பர் 28-ல் அவர் மறைந்தார்.

இந்த ஆண்டு குருபூஜைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு இந்த விழா அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘என்றும் கேப்டன்தான்’ என ரசிகர்கள் உணர்ச்சியுடன் பங்கேற்கின்றனர்.

Trending News

Latest News

You May Like