1. Home
  2. தமிழ்நாடு

விஜயகாந்த் சிலை : கண்ணீர்மல்க திறந்து வைத்த பிரேமலதா..!

1

அரசியல் தலைவராக மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். கேப்டன் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்தின் 72 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ஆள் உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க தனது கணவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் சிலையையும் தொட்டு தடவி கண்ணீர்விட்டார் பிரேமலதா.

இதனை பார்த்த தொண்டர்களும் கதறி அழுதனர். இந்த சிலை திறப்பு விழாவில் அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உட்பட குடும்பத்தினர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான தொண்டர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தேமுதிக அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அக்கட்சி சார்பில் அன்னாதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like