வி.ஏ. துரை மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்..!
தேமுதிக பொதுச்செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நடிப்பில் வெளியான கஜேந்திரா உள்ளிட்ட பல்வேறு. படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை, அண்மையில் திரைத்துறையினரிடம் உதவிக்கோரி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா, ராகவா லாரன்ஸ், கருணாஸ் போன்ற நடிகர்கள், அவரது சிகிச்சைக்காக உதவிய நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த படியே சிகிச்சைப் பெற்று வந்த வி.ஏ.துரை சிகிச்சைப் பலனின்றி காலமானார் என்பது குறிப்பிடதக்கது.
உடல் நலக்குறைவால் உயிரிழந்த திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை அவர்களின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
— Vijayakant (@iVijayakant) October 3, 2023
எனது நடிப்பில் வெளியான கஜேந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட (1-2) pic.twitter.com/6IOxC3zoSp