1. Home
  2. தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரை சந்தித்த விஜயபாஸ்கர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரை சந்தித்த விஜயபாஸ்கர்!


கொரோனாவால் பாதிக்கப்பட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்தியாவில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கொரோனா என்னும் பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா பரவல் அதிக வேகம் எடுத்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் செயலாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதேபோல, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரை சந்தித்த விஜயபாஸ்கர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வெற்றிவேல் நேற்று உயிரிழந்தார். இப்படி கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கே.பாலகிருஷ்ணனை சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்காக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like