விஜயபாஸ்கர் வீட்டில் எதுவும் பறிமுதல் செய்யவில்லை; லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்..!

 | 

சென்னையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறையின் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

1

காலை 7 மணி முதல் சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை என 23 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கரூரில் 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP