தேர்தலில் களமிறங்கும் விஜய பிரபாகரன்?
தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்காக தேமுதிக அலுவலகத்தில் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது