1. Home
  2. தமிழ்நாடு

விஜய் வசந்த் முன்னிலை...இயக்குநர் தங்கர் பச்சான் பின்னடைவு!

1

காலை 10 மணி நிலவரப்படி தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அதிமுகவின் ஜெயவர்தன் ஜெயக்குமார் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 13,801 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 7,918 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசிலியன் நசரேத் 1,337 வாக்குகளும், நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர் 1,135 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் 11,251 வாக்குகள் மட்டும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 34,269, அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் 24,277, நாம் தமிழர் கட்சியின் மணிவாசகன் 4,181 வாக்குகள் பெற்றுள்ளனர். இயக்குநர் தங்கர் பச்சான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரான கனிமொழி 30,554 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 4912 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஹுமாயுன் கபீர் 1680 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜகவின் முருகானந்தம் 1292 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவநேசன் 1211 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Trending News

Latest News

You May Like