1. Home
  2. தமிழ்நாடு

புதிய கட்சியை தொடங்கிய விஜய் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

1

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று  புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர்  விஜய்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “ இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது. விஐய்யின் மக்கள் பணி சிறக்ககட்டும். புதிய கட்சியை தொடங்கியதற்கு எனது பாராட்டுகள் “ என  தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஏற்கனவே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். சமீபகாலமாக  அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” எனப் பதிலளித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்து விட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.  இதன் அடிப்படையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘The Goat' படத்தை முடித்துவிட்டு பின்பு முழுமையாக விஜய் அரசியல் பணிகளில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.  


 

Trending News

Latest News

You May Like