1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சீரியலை இழுத்து மூடும் விஜய் டிவி..!

1

நடிகை சத்யா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தனம் சீரியல் வெறும் 2.09 டிஆர்பியை தான் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2.08 டிஆர்பி உடன் சக்திவேல் சீரியல் உள்ளது. விஜய் டிவி சீரியல்களிலேயே கடைசி இடத்தை பிடித்துள்ள சீரியல் என்றால் அது ஆஹா கல்யாணம் சீரியல் தான். இந்த சீரியலுக்கு வெறும் 1.89 டிஆர்பி ரேட்டிங் தான் கிடைத்துள்ளது. விஜய் டிவி தொடர்களிலேயே படுமோசமான டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ள சீரியல் என்றால் அது ஆஹா கல்யாணம் சீரியல் தான். இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், ஆஹா கல்யாணம் சீரியலை முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம். டிஆர்பியில் அதளபாதாளத்துக்கு சென்றதால் அந்த சீரியலை இழுத்து மூட முடிவெடுத்துள்ளனர். அந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் விக்ரம் ஸ்ரீ, காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, அக்‌ஷயா, விபிஷ், ராம், மவுனிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலுக்கு பதில் விரைவில் புத்தம் புது சீரியலை களமிறக்கவும் விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாம்.

Trending News

Latest News

You May Like