தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த விஜய் டிவி புகழ் ... பிரபலங்கள் வாழ்த்து !
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ் .தற்போது புகழுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அஜித்துடன் 'வலிமை', சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதோடு 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.
இதற்கிடையே பென்சியா என்ற பெண்ணை காதலிப்பதாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் அறிவித்தார். சமீபத்தில் கடற்கரையில் போட்டோஷுட் நடத்தி விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் நீண்ட நாள் காதலியான பென்சியாவை இன்று புகழ் திருமணம் செய்துக்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் விநாயகர் கோவிலில் எளிய முறையில் இந்த திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு நடிக்கரும் இயக்குனருமான சசிகுமார் வருகை தந்திருந்தார். திருமண புகைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போதே புகழ் - பென்சியாவின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிய துவங்கி விட்டது.
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதிகள் சென்னை புறப்பட்டு சென்றதாகவும், அங்கு விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அனைத்து சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுடன் நடைபெற இருக்கிறது என கூறப்படுகிறது.