விபத்தில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்..!

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள், சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் இணையதளங்கள் மூலம் பிரபலமாகி விஜய் டிவி சீரியல்களில் நடித்தவர் தான் நடிகர் சபரி நாதன்.
சமீபத்தில் முடிவுக்கு வந்த விஜய் டிவியின் பொன்னி சீரியலில் நாயகனாக நடித்திருந்த இவர், இதற்கு முன்பு, வேலைக்காரன் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்திருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை ரோஸ்ட் செய்யும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், பொன்னி சீரியலில் நடிகை வைஷ்ணவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் – வைஷ்ணவி இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பங்கேற்ற சபரி நாதன், வைஷ்ணவியுடன் பொன்னி சீரியல் டீம் தனி புகைபடம் எடுத்து வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் மற்றும் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்து வரும் சபரி நாதன், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம்.
தற்போது அவர், தான் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், என் உடல்நிலை குறித்து எனக்கு நிறைய கேள்விகள் வந்துள்ளன. நான் நலமாக இருக்கிறேன், விரைவில் திரும்பி வருவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், ஒரு தட்டு பொருத்தப்பட்டது. மன்னிக்கவும், இப்போதைக்கு செய்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. உங்கள் பிரார்த்தனைகள் தேவை, என்று பதிவிட்டுள்ளார்,
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில, சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ‘கெட் வெல் சூன்’ என்று பதிவிட்டு வருகின்றனர்.