பிரபல விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை - இனி இவருக்கு பதில் இவரா?

மகாநதி சீரியலில் கதையின் நாயகியாக லட்சுமிப் பிரியா நடித்துள்ளார். அவர் காவேரி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது தங்கையாக கங்கா ரோலில் பிரதீபாவும், யமுனா ரோலில் ஆதிரையும், நர்மதாவாக காவ்யாவும் நடித்து வந்தனர். அதேபோல் இந்த சீரியலின் நாயகனாக ஸ்வாமிநாதன் ஆனந்தராமன் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்று வரும் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த சீரியலில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரதீபா தனது கேரக்டருக்கு பெரியளவில் ஸ்கோப் இல்லாத காரணத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதில் திவ்யா கணேசன் அந்த ரோலை ஏற்று நடித்து வருகிறார். அதன்பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் திவ்யா கணேசனும் மகாநதி சீரியலை விட்டு கடந்த ஆண்டு விலகிய நிலையில், அவருக்கு பதில் தரணி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை மகாநதி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அந்த சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆதிரை தான் தற்போது அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார். போதிய அளவில் ஸ்கிரீன் ஸ்பேஸ் இல்லாத காரணத்தால் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் யார் யமுனா ரோலில் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. லேட்டஸ்ட் தகவலின்படி ஸ்வேதா என்பவர் அவருக்கு பதில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.