1. Home
  2. தமிழ்நாடு

முதல் முறையாக மக்களை சந்திக்க செல்கிறார் விஜய் ..!

Q

தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரத்தில் முதல் மாநாட்டை நடத்தினார். அதில், 'பரந்துார் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, விஜய் இன்று (ஜன.,20) பரந்துார் புறப்பட்டார். அவர் நீலாங்கரையில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். இதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அனுமதி அளித்துள்ளது. பரந்துார் செல்ல உள்ள விஜய், ஏகனாபுரம் கிராமம் அருகே, அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களை சந்தித்து பேசிகிறார்.

விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பின், விஜய், முதல் முறையாக மக்களை சந்திக்க, இன்று (ஜன.,20) களத்திற்கு செல்கிறார் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

போலீசார் விதித்த நிபந்தனைகள்!

* பரந்தூர் பசுமை விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். மேலும், வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும்.

* சட்டம் ஒழுங்கு நலனைப் பேண போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

* தாங்கள் பரந்தூர் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

* கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.

Trending News

Latest News

You May Like