அரசியல் கட்சி ஆரம்பிக்கும் விஜய் : பங்கமா கலாய்த்த அன்புமணி..!
லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், ‘2026ஆம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு’ என்று கூறி தனது அரசியல் வருகையை வெளிப்படையாக உறுதிப்படுத்தினார்.
சமீப காலமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். சட்டமன்ற தொகுதிகள் ரீதியாக நிர்வாகிகள், மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணி என ஒரு கட்சிக்கான கட்டமைப்புடன் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அணிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.சில நாட்களுக்கு முன்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே விஜய் கட்சி போட்டியிடலாம் என்றெல்லாம் தகவல்கள் பறக்கின்றன.
இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம், விஜய் கூட்டணிக்கு அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அன்புமணியோ, “இன்னும் கல்யாணமே ஆகவில்லை. அதற்குள் குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே..” என்று பதிலளித்தார். மேலும், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் விஜய்க்கு அட்வைஸ் வழங்கினார்.கூட்டணி பற்றிய கேள்விக்கு, “இவ்வளவு நாட்கள் பொறுத்துவிட்டீர்கள்.. இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருங்கள். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.