1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் நாளை நடைபெறும் போராட்டத்திற்கு வரும் விஜய் ? கட்டுப்பாடுகளுடன் போலீஸ் அனுமதி!

1

கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த கடந்த ஜூலை 3 ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் வேறு ஒரு போராட்டம் நடந்ததால் வேறொரு நாளில் போராட்டத்தை வைத்துக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியது.மேலும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டம் நடத்துவது தொடர்பாக அனுமதி பெற வேண்டும் என்றால், காவல்துறையினருக்கு 15 நாட்களுக்கு முன் மனு அளிக்க வேண்டும் அப்படி அவர்களிடம் கூறினால் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி கூறினார்.

தொடர்ந்து சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த நீதிபதி அனுமதி அளித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராட்டத்தை முடித்துக் கொள்ளவும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கி முதன்முறையாக விஜய் கலந்து கொள்ளும் போராட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது மேலும் இந்த போராட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like