பொதுக்குழு மேடையில் குழப்பத்துடன் பேசிய விஜய் : இட்ஸ் வெரி ராங் ப்ரோ!

தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
விஜய் பேசுகையில், தமிழுக்கு அமுதென்று பெயர். தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் புதிய வரலாறு படைக்க தயாராக வேண்டிய அவசியத்தை புரிந்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா குடும்பமும் நன்றாக வாழுறதுதான் தேவை. ஆனால் ஒரே ஒரு குடும்பம் மட்டும் சுரண்டி சுரண்டி நல்லா வாழுறது அரசியலா?
கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல். மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சி நமக்கு எதிராக செய்யும் ஒன்றா, இரண்டா? புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், பொதுக் குழுவுக்கு தடைகள் என மாற்றி மாற்றி குடைச்சல் கொடுத்தீங்க.
ஏற்கெனவே அர்ஜுன், நிர்மல்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் நல்லா அடித்துவிட்டார்கள். நாமும் அடிக்கணுமானு யோசனையா இருக்கு. (திமுக, பாஜகவை விமர்சிப்பதை குறித்து கூறுகிறார்). மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேர மட்டும் வீராப்பா சொன்ன பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் காட்டணும் என்றார்.
மேலும் இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பெயர்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டு விஜய் விமர்சனம் செய்திருந்தார். விஜய்யின் பேச்சுக்கு நிர்வாகிகள் கை தட்டியபடியே இருந்தனர். இந்த நிலையில் விஜய் தனது உரையை முடிக்கும் போது ஆங்கில வரிகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.
"Men may come and Men may go , but I go on forever" என்ற William blake எழுதிய கவிதையுடன் தனது உரையை முடிப்பதாக விஜய் தெரிவித்திருந்தார்.ஆனால் உண்மையில் Alfred lord Tennyson என்ற கவிஞரே அதனை எழுதியுள்ள நிலையில், தற்போது முதல் பொதுக்குழு மேடையில் விஜய் குழப்பத்துடன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.