1. Home
  2. தமிழ்நாடு

திமுக அரசுக்கு விஜய் கண்டனம்..!

Q

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது.

நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு மேல், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் குடும்பத்தினருடன் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள், நள்ளிரவு 1 மணியளவில் இருந்து புறப்பட்ட ஒரு சில பேருந்துகளையும் சிறை பிடித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த மறியலில் பங்கேற்றதால், நெடுஞ்சாலையில் 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலை மறியல் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிமீ தொலைவுக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று (ஜூன் 07) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 4ம் தேதி இரவு முதல் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பேருந்து இல்லாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கிளாம்பாக்கத்தில் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். மக்களின் தேவைகளை அறிந்த ஆட்சி செய்யவில்லை என்பதற்கு பேருந்து நிலைய செயல்பாடே சாட்சி" என சாடியுள்ளார்.

Trending News

Latest News

You May Like