விஜய் சேதுபதியின் படம் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்!

விஜய் சேதுபதியின் படம் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்!

விஜய் சேதுபதியின் படம் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்!
X

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள /பெ.ரணசிங்கம் திரைப்படம் அக்டோடர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தான் இப்போதைய ட்ரெண்ட். தமிழில் பொன்மகள் வந்தாள் படம் தான் முதல் ஓடிடி ரிலீஸ். அதனைத் தொடர்ந்து பெண்குயின் வந்தது. அக்டோபர் 31 சூரறைப் போற்று வர இருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் /பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. ஜீ பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it