விஜய் சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை..!
கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார் காசம்மாள்.
மது போதைக்கு அடிமையான இவரது மகன் நாமக்கோடி குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை காசம்மாளை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார் அவரது மகன். பெற்ற தாயை அடித்துக் கொன்ற நாமகோடியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்