திரையரங்கு பாணியில் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம் !!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது "ரணசிங்கம்" என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். "ரணசிங்கம்" படத்தை குணச்சித்திர நடிகரான பெரிய கருப்ப தேவர் உடைய மகனான விருமாண்டி இந்தத் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
கே ஜே ஆர் ஸ்டூடியோ தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார். விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
தற்போது ஜி ஃப்ளெக்ஸ் (Zeeplex) என்ற OTT நிறுவனம் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.திரையரங்குகளை போலவே காட்சிக்கு கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் வெளியாகிறது.அதன் படி இந்த படம் ஜீ ஃப்ளெக்ஸ் தளத்தில் pay per view அடிப்படையில் வெளியாக உள்ளது. இந்தப் பாணியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக 'க/பெ. ரணசிங்கம்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்.2 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரூபாய் 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரணசிங்கம் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது..
இது தொடர்பான வீடியோ பதிவினை ஜீ ப்ளக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.
ZeePlex officially confirms that the Tamil film #KaPaeRanasingam will be streaming on their platform directly with the pay-per-view model.pic.twitter.com/x1RU3SWrko
— LetsOTT GLOBAL (@LetsOTT) September 10, 2020
newstm.in