நாளை வெளியாகும் ‘மாவீரன்’ படத்தில் விஜய் சேதுபதி..!

பிரின்ஸ்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாவீரன்’. இந்தப் படத்தை மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனே அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வில்லனாக பிரபல இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கிறார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மாவீரன் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே, படம் குறித்த புதிய தகவல் ஒன்றை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி, புதிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, மாவீரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குரல் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.
My dear brother @VijaySethuOffl thank you for your kind gesture 🤗
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 11, 2023
மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🤗🤗
- Sivakarthikeyan#Maaveeran#VeerameJeyam #MaaveeranFromJuly14th pic.twitter.com/Nobb7HOIhC
படத்தின் டிரெய்லரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேல் நோக்கி பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது மேலிருந்து விஜய் சேதுபதி பேசுவதாக வீடியோ ஒன்றை தனது டுவீட்டரில் வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை குறிப்பிட்டு ‘மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.