வெளிமாநிலத்தில் இருந்தாலும் கூட கடமையை சரியாக செய்த விஜய் சேதுபதி!
ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, ராதிகா, டாப்ஸி ஆகியோர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி பன்னு ஒரு முழு நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜெயப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ராதிகா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள்.
ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, ராதிகா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உருவப்படத்திற்கு விஜய் சேதுபதி, ராதிகா, டாப்ஸி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
newstm.in