வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்..!
தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு 20 வயது இளைஞராக இருந்தபோதே புரட்சி தலைவர் எம்ஜிஆரை நம்பி அவரது மன்றத்தில் இணைந்தவர் செங்கோட்டையன். அந்த சிறு வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரும் பொறுப்பை ஏற்றவர். பின்னர் அதிமுக இயக்கத்தில் இரு பெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.
இப்படி 50 வருடங்களாக ஒரே இயக்கத்தில் இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன். இன்று அவருடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவருக்கும், நம்மோடு இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லது நடக்கும், நல்லதே நடக்கும், நல்லது மட்டுமே நடக்கும், வெற்றி நிச்சயம்” என கூறியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025