Ramp வாக்கில் தொண்டர்களை சுற்றி சுற்றி எடுத்த வீடியோவை வெளியிட்ட விஜய்..!
மதுரையில் நேற்று (ஆக. 21) விஜய் தலைமையில் தவெக கட்சி மாநாடு நடைபெற்றது. இதில், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ரேம்ப் வாக் செய்தபோது மக்களுடன் சேர்ந்து செல்ஃபி காணொளி எடுத்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், அந்த காணொளியை அவர் சற்றுமுன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். காணொளி பார்க்க சற்று பிரமாண்டமாக உள்ளது.
இதனை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள அவர், 'உங்க விஜய் தனி ஆள் இல்ல, கடல்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் ரசிகர்களின் கூட்டம், கூட்டமாக கூடியவர்களை வாக்குகளாக மாற்றுவது சிரமம் என விமர்சனங்கள் எழும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.
உங்க விஜய் உங்க விஜய்
— Vijay (@actorvijay) August 22, 2025
உயிரென வர்றேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான் pic.twitter.com/FRQcu4b8aq