1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டம்..?

1

தவெக மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை முன்னெடுத்துள்ள விஜய் கூட்டணிக்கான வாசலை திறந்து வைத்துள்ளார்.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிகளில் உள்ள கட்சிகளை இழுக்கவும், எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை வரவழைக்கவும் தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார்.

எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார்.

அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. எந்த மாவட்டத்திற்கு செல்கிறாரோ, அந்த மாவட்டத்தில் தங்கியிருந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். 2 நாள் நிகழ்வுகளில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொதுக்கூட்டம், நல உதவிகள் நிகழ்ச்சி என்று பிரிக்கப்பட்டு உள்ளது.

பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் 5 இணையும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.மக்கள் சந்திப்புக்காக விஜய்க்கு சிறப்பு வசதிகளுடன் வாகனம் தயாராகி வருகிறது. அந்த வாகனத்திலேயே அவர் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டியை போல் நெல்லையில் மாநாடு நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like