கொதிக்கும் வெயில் : தண்ணீர் பந்தல் திறக்க நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு..!

தமிழக சட்டசபை அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கள நடவடிக்கைகளை தற்போதே தொடங்கி விட்டன. மக்கள் நலத்திட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்பட பல்வேறு செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;-
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோடை வெயிலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூர் பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் நம் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக நிர்வாகிகள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனித்து செயல்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது