1. Home
  2. தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி விநியோகம்..!

1

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இந்த இலவச தக்காளி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நபர் ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி என பேக் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு 100 கிலோ தக்காளி இலவசமாக இன்று காலை வழங்கப்பட்டது.

இதனை பொதுமக்கள் முண்டியடித்துக்  கொண்டு வாங்கிச் சென்றனர். தக்காளி விலை பெறும் அளவில் உயர்ந்துள்ள காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இதன் காரணத்தாலேயே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கி உதவி செய்து வருவதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like