1. Home
  2. தமிழ்நாடு

இனி விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்கள், தமிழக வெற்றி கழகத்தின் செயலாளர்கள்..!

Q

விஜய் தனது கட்சிப் பெயரை தமிழக வெற்றி கழகம் பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் பதிவு செல்வதற்காக சென்றிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விஜய்யிடம் இருந்து கட்சி தொடங்குவதான அறிவிப்பும், கட்சிப் பெயரும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
கட்சிப் பெயரில் தமிழ்நாடு என வராமல் தமிழகம் என குறிப்பிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. ‘க்’ என்ற ஒற்றெழுத்து போடாததும் சர்ச்சையானது. அதேபோல் ஆங்கிலத்தில் கட்சிப் பெயரை சுருக்கி கூறும் போது TVK என்று குறிப்பிடும் படி உள்ளது. இதே பெயரில் தான் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழைக்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க கட்சியை பதிவு செய்த உடனே விஜய் கட்சிப் பெயரை வெளியிட்டிருக்க கூடாது. அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பின்னர் பொதுக் கூட்டம் வைத்து கட்சிப் பெயரை அறிவித்திருக்கலாம். இல்லையேல் கட்சிப் பெயருக்கு எதிராக யாரும் தேர்தல் ஆணையத்தை அணுக நேரிடும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.
தனது கட்சியின் சுருக்கெழுத்து டிவிகே என்றிருக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு கூடுதலாக ஒரு எழுத்தை சேர்க்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சி விரைவில் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளதாம். இந்த நிலையில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை விஜய் பிறப்பித்துள்ளாராம்.
தமிழகம் முழுவதும் 'விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களாக உள்ளவர்கள், இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள்' என விஜய் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசினார். அதில், எந்த பாகுபாடும் இல்லாமல் மக்கள் பணியாற்றவும், கட்சிப் பெயரை பிரபலப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like