1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களிடம் முக்கிய உறுதிமொழி எடுக்க வைத்த விஜய்..! எதிர்கலத்தில் அரசியலும் ஏன் கேரியர் ஆப்ஷனாக இருக்கக் கூடாது? விஜய்

1

கல்வி விருது விழா வழங்கும் மேடையில் பேசிய நடிகர் விஜய்,“நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி தங்கைகளுக்கும், பெருமையுடன் வந்துள்ள பெற்றோர்களுக்கும், விழாவை ஏற்பாடு செய்த ஆனந்திற்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பானவர்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள்.

மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு சிலரை சந்தித்தால் அவர்களது பாசிட்டிவ் கெமிஸ்ட்ரி நமக்கும் வொர்க் அவுட் ஆகும் என்பார்கள், அந்த வகையில் உங்களை சந்தித்ததில் ஒரு பாசிட்டிவ் கெமிஸ்ட்ரி பயங்கரமாக வொர்க் அவுட் ஆகிறது.

உங்களுக்கு கரியரில் முடிவு எடுப்பதில் தொய்வு குழப்பம் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் பெற்றொர்கள் அல்லது உங்களது ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். எல்லா துறையும் நல்ல துறைதான் நீங்கள் எடுக்கும் துறையில் 100 சதவீதம் உழைப்பு போட்டால் நல்லது தான்.

உங்களுக்கு பிடித்த துறையில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக நாம் ஒரு துறையை தேர்வு செய்யும் போது அதில் எந்த அளவு தேவை உள்ளது என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் நன்றாக செயல்பட்டால் தலைமை இடத்திற்கு வர முடியும்.

இங்கு என்ன அதிகம் தேவை என்றால் நல்ல தலைவர்கள், நான் இதனை அரசியல் ரீதியாக சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும், எதிர்காலத்தில் அரசியலும் கரியரில் ஒரு தேர்வாக இருக்க வேண்டும். நன்கு படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர வேண்டும். படிக்கும் போது மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும். செய்தித்தாள்கள் நிறைய படிக்க வேண்டும். அவ்வாறு செய்திகளை அதிகம் படித்தால், செய்தி வேறு, கருத்து வேறு என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.

சமூக வலைதளங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் பார்க்க வேண்டும். பெற்றோருக்கு அடுத்தபடியாக நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்படும், அதனால் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். தவறான நண்பர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். மேலும் நீங்கள் தவறான பழக்கத்தில் ஈடுபட்டு, உங்களது அடையாளத்தை இழந்து விடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

மாணவர்களிடம் முக்கிய உறுதிமொழி எடுக்குமாறு வழியுறுத்தினார். அப்போது போதை பொருள் பயன்படுத்த கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து உறுதிமொழி எடுக்க வைத்தார்.

“எந்தத் துறையும் நல்லதுதான்.. 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் பேசினார்.

“எதிர்கலத்தில் அரசியலும் ஏன் கேரியர் ஆப்ஷனாக இருக்கக் கூடாது? படித்தவர்கள் அரசியலுக்கு வரணுமா வேண்டாமா? ”என மாணவர்களை நோக்கி விஜய் கேட்டார்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சைவ விருந்து வழங்கப்பட்டது. அந்த மெனுவில், சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் உள்ளிட்டவை இடம்பெற்றது.

Trending News

Latest News

You May Like