சோகத்தில் விஜய்..! பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு..!
தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்றது.
காலை 10 மணிக்கு மேல்தான் உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்தில் திரளத் தொடங்கினர். இவ்வேளையில், தவெக தொண்டர்கள் சென்ற வாகனங்கள் சில விபத்துக்குள்ளாகின.
தவெக மாநாட்டுக்கு சென்றிருந்த அக்கட்சி தொண்டர்களில் 6 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி(65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்