1. Home
  2. தமிழ்நாடு

அரசியல்வாதிகளை பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ன போறது இல்லை - விஜய்..!

1

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் இதுவரை பேசிய பேச்சுக்களை விட இன்று மாநாட்டில் மிக கம்பீரமாக பேசினார். முக்கியமாக எல்லா விஷயத்தையும் சட்டு சட்டு என போட்டு முடித்துவிட்டார்.

இங்க ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிய பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறதும் இல்லை.. அதுக்காக மொத்தமாக கண்ண மூடிட்டு இருக்க போறதும் இல்லை. இப்போ என்ன தேவை.. இதை எப்படி தீர்த்து வைப்பது.. இப்ப என்ன பிராப்ளம்.. அதை தீர்க்க என்ன செய்யனும்.. இப்படி யோசிச்சா போதும்.. கடவுள் மறுப்பில் உடன்பாடு இல்லை. ஆனால் தந்தை பெரியார் வழியில் என்றது உடனே அரசியல் சாயம் பூசுகிறார்கள். சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனையை முன்னெடுப்போம் என்று சொன்னால் உடனே பெயிண்ட் டப்பாவை தூக்கிட்டு வந்துட்றாங்க..

நம்முடையை கொள்கை, கோட்பாடுகளையும், வழிகாட்டி தலைவர்களையும் மனதில் நினைத்து அதன் போக்கில் செயல்பட வேண்டும். நாம செயல்படுகிறத பார்த்து வேகமானவங்க.. ஆனால் விவேகமானவங்க.. என்று எல்லாரும் சொல்ல வேண்டும். அப்படி சொல்ல வைப்பதோடு செயல்பட வைக்க வேண்டும். செயல்.. செயல்.. தான் முக்கியம். வெறுப்பு அரசியலை எதையும் கையில் எடுக்க போறதில்லை. எத நினைத்து நாம் அரசியலுகு வந்திருக்கோமோ.

அத செய்து முடிக்க நாம் போராட வேண்டும். வேறு எந்த திசையிலும் கவனம் சிதறாமல் நம் இலக்கு என்னவோ அதை செய்ய வேண்டும். எத நினைச்சு அரசியலுக்கு வந்திருக்கோமோ அதை பிசிறு இல்லாமல் செய்து முடிப்போம். என்ன நண்பா.. என்ன நண்பி..சாரி.. சாரி.. என்ன தோழா… என்ன தோழி.. என்று விவேகமாக விஜய் பேசினார். மேலும் இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க என்று நானும் நினைத்தேன். நடித்தோமா.. நாலு காசு பார்த்தோமா என்று தான் நானும் நினைத்தேன்.. ஆனால் நாம மட்டும் நல்லா இருக்கனும்னு நினைச்சா அது சுயநலம் இல்லையா.. ஆனால் நம்ம வாழ வைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் இருக்கிறது.. நல்ல விசுவாமாக இருக்குமா.

ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்ய போகிறோம்.. எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் அது நல்லா இருக்குமா.. இதுக்கு என்ன செஞ்சா தீர்வு வரும்னு.. யோசிச்சு முடிவு எடுத்தது தான் அரசியல்..

அதே போல் நாம தனித்து போட்டியிட்டாலும் வெற்றி உறுதி. ஆனாலும், நம்மை நம்பி கூட்டணிக்கு வருபவர்களையும் அரவணைத்துச் செல்வோம். அதிகாரத்தைப் பகிர்வோம்’’ இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like