1. Home
  2. தமிழ்நாடு

இன்னும் சற்று நேரத்தில் வருகிறார் விஜய்…!

1

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நேற்று முதலே மதுரையை நோக்கி தொண்டர்கள் பலரும் படையெடுத்து வருகிறார்கள். இளைஞர்கள் கூட்டத்தால் மதுரையே அலறிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் TVK தொண்டர்கள்தான் காணப்படுகின்றனர். தொண்டர்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு பணிகள் என அனைத்துமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மதுரைக்கு வந்து விட்ட நிலையில் நேற்று இரவு மாநாட்டு திடலுக்கு வந்து பார்வையிட்டார்.

இதனிடையே மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயை காண தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நான்கு மணிக்கு பதில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அதாவது 3 மணிக்கு மாநாட்டு மேடைக்கு விஜய் வருகை தர உள்ளார். இதன் காரணமாக தற்போது ஆதவ் அர்ஜுனா மற்றும் என். ஆனந்த் வாக்கி டாக்கியுடன் மாநாடு மேடைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர். விஜயின் அனல் பறக்கும் பேச்சை கேட்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் டிவி முன்பும் மாநாட்டு திடலிலும் காத்துக்கொண்டிருக்கிறது.

Trending News

Latest News

You May Like