பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டும் விஜய்..!

ஆண்டுதோறும் 10,12 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை நேரில் அழைத்து விஜய் பாராட்டு தெரிவித்து வருகிறார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நடைபெறும் இந்த விழாவில் விஜய் முழுவதுமாக அரங்கில் இருந்து ஒவ்வொரு மாணவரையும் நேரில் அழைத்து பாராட்டி, அவர்களையும் பேச வைத்தார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி, பிளஸ் ஒன், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தவெக வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்ட உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மே 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாமல்லபுரத்தில் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது என்றும் தெரிவித்த தவெக, “மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் அன்பும் அக்கறையும் கொண்டுள்ள விஜய் அவர்கள், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளது.
அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
— TVK Party HQ (@TVKPartyHQ) May 26, 2025
— TVK Party HQ (@TVKPartyHQ) May 26, 2025