1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் திருப்பம்..! காலையில் விஜய்... மாலையில் அண்ணாமலை..!

1

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தின. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.


இச்சம்பவத்தைக் கண்டித்து தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் இன்று (டிச.30) சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் கொண்ட மனுவை விஜய் தமிழக ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.


இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டி ராஜ்பவனில் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார். அப்போது, தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில், தற்போது அண்ணாமலையும் ஆளுநரை சந்திக்க இருப்பது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like