1. Home
  2. தமிழ்நாடு

கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய் - தொண்டர்கள் ஆரவாரம்..!

1

மிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததும், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அவரை நோக்கி தொண்டர்கள் வீசிய கட்சி கொடியை, த.வெ.க. தலைவர் விஜய் தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.

அதன்பிறகு மேடைக்கு சென்ற விஜய் அங்கு வைக்கப்பட்டு இருந்த மாமமன்னர்கள், மொழிப்போர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த 100 உயர கொடி கம்பத்தில் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார். த.வெ.க. தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றும் போது தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து த.வ.க. தொண்டர்கள் கட்சி உறுதிமொழி ஏற்றனர்.த.வெ.க. பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு இதுவரை சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று தெரியவந்துள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like