1. Home
  2. தமிழ்நாடு

இயக்குனரை காதலித்ததால் மொத்த கெரியரும் போச்சு - புலம்பி தள்ளும் விஜய் பட நடிகை..!

1

தளபதி விஜய்க்கு ஜோடியாக புதிய கீதை படத்தில் நடித்தவர் அமீஷா படேல். அதற்கு பின் தமிழ் படங்களில் நடிகை அமீஷா படேலை பார்க்கவே முடியல. நடிகை அமீஷா படேல் ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும் கூட தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். நடிகை அமீஷா படேல் ஹிந்தியிலே பல படங்களில் நடித்து வருகிறார் தற்போது அவர் சன்னி தியோல் ஜோடியாக Gadar 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அமீஷா படேல் அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் தான் ஒரு இயக்குனரை காதலித்ததால் மொத்த கெரியரும் போச்சு என புலம்பி இருக்கிறார்.இந்த துறையில் நேர்மையாக இருந்தால் யாருக்கும் பிடிக்காது. அதுவே என் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாகவும் வந்தது. நான் இயக்குனர் விக்ரம் பட் உடன் காதலில் இருந்தது பற்றி வெளிப்படையாக பேசினேன்.

அதுவே என் கெரியருக்கு பிரச்சனையானது. 12 – 13 வருடங்களாக நான் ஆண்களே வேண்டாம் என நினைத்து வேறு யாரையும் காதலிக்கவில்லை. நடிகை சிங்கிளாக இருந்தால் தான் ஆடியன்ஸும் ரசிக்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என அமீஷா பட்டேல் தெரிவித்து இருக்கிறார்.

Trending News

Latest News

You May Like