விஜய் சேதுபதியால் பயத்தில் உள்ள விஜய் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?
800 திரைப்பட சர்ச்சை வலுத்துவரும் சூழலில் விஜய் சேதுபதியால் மாஸ்டர் படத்தின் ரிலீஸூக்கு பிரச்னை வந்துவிடுமோ என்று விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 800 படத்தில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், சீனுராமசாமி, பாடலாசிரியர் தாமரை, நடிகர் விவேக் உள்ளிட்டோர் 800 படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்னையால் விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
காரணம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸூக்கு ரெடியாக இருக்கிறது. 800 திரைப்பட சர்ச்சை காரணமாக மாஸ்டர் திரைப்பட வெளியீடு பாதிக்கப்படுமோ என்ற வருத்தத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
newstm.in