இந்த 25 பேருக்கு விஜய் விருந்து வழங்க முடிவு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிலம் வழங்கிய சுமார் 25 பேருக்கு விஜய் விருந்து வழங்க உள்ளார். பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக 230 ஏக்கர் நிலம் வரை விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் நிலம் தந்தவர்களுக்கு விஜய் தனது கைகளால் உணவு பரிமாறுகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.