ரஜினியை தொடர்பு கொண்ட விஜய்..!
வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தாலும், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்ட பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவது, கல்வி வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் செய்து வரும் விஜய் அரசியல் நகர்வுக்கான பணிகளிலும் தீவிரம் காட்டி வந்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வந்திருப்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் ரஜினி விஜய்க்கு ஆதரவு தருவாரா என்பது குறித்து விமர்சகர் அந்தணன் டேக் ஒன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி கடந்த 2ம் தேதி வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஜய்க்கு ரஜினி காந்த் ஆதரவு கொடுப்பாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
விஜய் நடிக்கும் 69-வது திரைப்படம் தான் அவரது திரைவாழ்வில் இறுதிப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் ஒரு பக்கம் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் சென்ற ரஜினிகாந்திடம், விஜய் கட்சி தொடங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினி, கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் ரஜினியை தொடர்பு கொண்ட விஜய், நன்றி சொன்னதாக கூறப்படுகிறது.