1. Home
  2. தமிழ்நாடு

புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து..!

Q

கே பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலச் செயலர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கே பாலகிருஷ்ணன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 72 வயது ஆனவர்களுக்கு செயலாளர் பதவி கொடுக்கப்படாது என்றும், ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற விதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளது.

இதனால் கே பாலகிருஷ்ணன் ஏற்கனவே இரண்டு முறை பதவி வகித்து உள்ளதாலும், அவருக்கு தற்போது 71 வயது ஆகிவிட்டதாலும் இந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ சண்முகம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like