சைலண்டாக தியேட்டருக்கு வந்து படம் பார்த்த விஜய்.!
ரஜினி ரசிகர்களால் வேட்டையன் திரைப்படம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இப்படத்தை பற்றி விஜய் ரசிகர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை கேட்கவும் பொதுவான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
வேட்டையன் திரைப்படம் ஒரு சில விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும் பெரும்பாலான விஜய் ரசிகர்களை இப்படம் பெரிதாக ஈர்க்கவில்லை என்றுதான் தெரிகின்றது. அவர்கள் வேட்டையன் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தான் கூறி வருகின்றனர். ஒரு சில விஜய் ரசிகர்கள் வேட்டையன் திரைப்படத்தை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் கண்டிப்பாக குடும்பங்கள் மற்றும் ரசிகைகள் ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்று தான் விமர்சனங்கள் வருகின்றன. இன்று நல்ல ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக வரும் மூன்று நாட்களுக்கு வேட்டையன் படத்திற்கு அமோகமான வசூல் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வேட்டையன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இன்று காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கண்டுகளித்தார். அதேபோல் வேட்டையன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் தனுஷ் உடன் சேர்ந்து வேட்டையன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.
இதுமட்டுமின்றி தளபதி விஜய்யும் வேட்டையன் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பார்த்து ரசித்ததாக தகவல் பரவி வருகிறது. சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ரஜினி ரசிகர்களுடன் நடிகர் விஜய் வேட்டையன் படத்தை கண்டுகளித்ததாக கூறப்படுகிறது. படம் முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு யாருக்கு தெரியாதபடி சீக்ரெட் வழியில் வந்து விஜய் காரில் ஏறி செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.