திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விஜய்.. காவல்நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம் !

சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் பட்டதாரி இளம்பெண் கவுதமி வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த தண்ணீர் கேன் சப்ளை செய்யும் விஜய் (29) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவருக்கும் இடையே நாளடைவில் நட்பு காதலாக மாறியது. அப்போது திருமணம் செய்துக்கொள்வதாக கூறி அப்பெண்ணை இளைஞர் விஜய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் திருமணம் குறித்து கவுதமி பேசும்போதெல்லாம் தவிர்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சாதியை காரணம் காட்டி அப்பெண்ணை விஜய் திருமணம் செய்ய மறுத்ததாகவும்,
இது குறித்து கேட்டதால் விஜய் மற்றும் அவரது தந்தை, சித்தப்பா உள்ளிட்டோர் கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதாகவும் அப்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் விஜய் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கவுதமி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
விஜய் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் அண்மையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விரைவில் விஜய் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
newstm.in