1. Home
  2. தமிழ்நாடு

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் - விஜய் பதிவு..!

Q

2009 ஆண்டு மே 16,17, 18 ஆகிய நாட்கள் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ஈகையினரின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சை விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று 15வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்தவும், மாவட்ட செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் தவெக தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் முன்னிட்டு  X தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், "உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று இன்று உறுதி ஏற்போம். உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்!" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like