சென்னை பெரியார் திடலில் விஜய்... கட்சி தொடங்கிய பின் இதுவே முதல்முறை...
பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தொண்டர்கள் புடைசூழ, தவெக தலைவர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இது அவர் அரசியல் கட்சி தொடங்கியபின், பொதுவெளியில் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வாகும். இதுவரை வேறு எந்த தலைவர்கள் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தாத நிலையில், முதல்முறையாக பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.