ப்ளூ சட்டை மாறனுக்கு விஜய் ஆண்டனி சவுக்கடி..!
"நான்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், சைத்தான் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அந்த படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து காட்டினார்.
தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் "ரோமியோ". இப்படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் யூடியூபில் 'காதல் டிஸ்டன்ஸிங்' என்ற பிரபலமான வெப் சீரிஸை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
ரோமியோ திரைப்படம் கடந்த ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியானது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் யூட்யூப் சேனல் மூலமாக திரைப்படங்களை விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் ரோமியோ திரைப்படத்தையும் விஜய் ஆண்டனியின் நடிப்பையும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து வரும் திரு .ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவர்கள் சொல்வதை எல்லாம் எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்… மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும்… ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.